|
1984ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 19ம் நாள் கோவிந்தகுடி வாழ் இளைஞர்கள் ஒன்றுகூடி உள்ளூர் சமூக பணிகளை நிறைவேற்றிடும் நோக்கில், இளைஞர் நற்பணி மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் மூலம் இந்த கிராமத்தில் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தந்தது. இந்நிலையில் உள்ளூர் சிறார்கள் ஆங்கிலகல்வி கற்க நகரை நோக்கிச்சென்று அன்றாடம் சிரமத்துடன் வீடு திரும்புவதை கணணுற்ற எங்கள் உள்ளத்தில் நமது ஊரில் தரமான ஆங்கில பள்ளியை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதன் விளைவாக, ராஜகிரி வெல்ஃபேர் அசோசியேஷன் செயலர் N.A.M யூசுப் அலி அவர்களின் நல் ஆலோசனைகளுடன் 1987ம் ஆண்டு மே திங்கள் 30ம் நாள், மறைந்த கொடைவள்ளல் E.S.M பக்கிர் முகம்மது அவர்களால் எங்களூர் பள்ளிவாசல் திறந்திட வருகை தந்த மறைந்த ஜணாதிபதி டாக்டர். ஜாகிர் ஹுசைன் நினைவாக அவர்கள் பெயரில் கோவிந்தகுடி பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்தில் தொடங்கப்பட்டது.
|